சீனாவில் தங்க சுரங்கத்துக்குள் சிக்கிய 11 தொழிலாளர்களும், 14 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஷான்டோங் (Shandong) மாகாணத்தில் குவிக்சியா Qixia என்ற பகுதியில் கடந்த 10 ஆம் திகதி தங்கச் சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டிருந்தது.
இந்த விபத்தில் சுரங்கத்துக்குள் பணியில் ஈடுபட்டிருந்த 22 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
மீட்பு பணிகள்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 14 நாட்களுக்குப் பின்னர், இன்று காலை 11 மணியளவில் தொழிலாளி ஒருவர் மீட்கப்பட்டார்.
இதையடுத்து, மேலும் 10 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 2 தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
எஞ்சியுள்ள 10 தொழிலாளர்கள் ஆழமான பகுதியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை அடைய இன்னும் 2 வாரங்கள் ஆகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.