‘கனடா முழுவதும் பணியிட அறிக்கையிடல் போதுமானதாக இல்லை’ என்று டொராண்டோவின் சுகாதார பிரிவுத் தலைவர் ஜோ க்ரெஸி (Joe Cressy) தெரிவித்தார்.
இந்த நிலைமையானது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் என்றும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே கனடாவில் பணியிடங்களை மையப்படுத்திய புதிய கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் வெளிப்படைத் தன்மையான செயற்பாடு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.