போர்த்துக்கல் ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசா (Marcelo Rebelo de Sousa) வெற்றி பெற்றிருப்பதாக தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
போர்த்துக்கல்லில் இன்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் இறுக்கமான சுகாதார நடவடிக்கைக்கு மத்தியிலும் தேர்தலில் வாக்களிக்க பெருமளவிலான மக்கள் ஆர்வம் காட்டியதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதனால் 70% இற்கும் குறைவாக வாக்குப்பதிவே இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசா (Marcelo Rebelo de Sousa), 57 தொடக்கம் 62 வீதம் வரையான வாக்குகளைப் பெறுவார் என்று பிந்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சோசலிச கட்சி வேட்பாளர் அனா கோமிஸ் ( Ana Gomes) 13 தொடக்கம் 16 வீதமான வாக்குகளையே பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.