இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையகம், மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளது.
முதல் முறையாக வாக்களிப்பதற்காக, அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்கள் அனைவருக்கும், வரும், நாளையில் இருந்து, 31ஆம் திகதி வரை, ‘இ – இபிக்'(e-EPIC) எனப்படும், மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், புகைப்படம், வரிசை எண், பகுதி எண் உள்ளிட்ட விபரங்களுடன், பாதுகாப்பான, ‘க்யூஆர் கோட்’ (QR code) வசதி இருக்கும்.
இதை, வலைதளம் மூலம் அலைபேசி அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இரண்டாம் கட்டமாக, பெப்ரவரி 1ஆம் திகதி முதல், அனைத்து வாக்காளர்களுக்கும், ‘இ – இபிக்’ (e-EPIC) பதிவிறக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.