ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏறபடுத்தும் நடவடிக்கைகள் எதிலும் அரசாங்கம் ஈடுபடாது.
மனித உரிமை பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வு என சிறிலங்கா அரசாங்கம் கருதும் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை அரசாங்கத்துக்கு உள்ளது.
முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போவதில்லை.
அது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்