ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள், தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்குமுறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
“ போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு குழுவை நியமிப்பதற்கு சிறிலங்கா ஜனாதிபதிக்கு எந்த தகுதிகளும் இல்லை.
அவர்பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது தான் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன.
போர்க்குற்றம் புரிந்தவர்களே போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கு குழுவை நியமிப்பது கேலிக்கூத்தான ஒரு விடயம்.
இந்த குழுவை சர்வதேசமோ ஐ.நா மனித உரிமைப் பேரவையோ எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.