தீவகத்தில் கடற்படையினர் கடந்த 30 வருடகாலமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்களை விடுவிக்கவேண்டும் என கோரி இன்று வேலணை பிரதேச செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது பொதுமக்களின் காணிகளை களவாடாதே, எமது காணிகளை எமக்கே திரும்பவும் வழங்கு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பதாகைகளையும் தாங்கியிருந்தனர். மேலும், பிரதேச செயலாளரிடத்திலும் மனுவொன்றும் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது