நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
மாத்தறை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.
முதலாவது அலையை முடக்க கட்டுப்பாடுகள் மூலம் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் முடிந்தது என குறிப்பிட்ட அவர், பொருளாதாரத்தையும் நாட்டையும் தொடர்ச்சியாக நிறுத்திவைக்க முடியாது என ஜனாதிபதி கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால், சுற்றுலாத்துறையினால் கிடைக்கும் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை நாடு இழந்தது என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.