கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில், தமிழர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே இருப்பதாக சுகாதார அமைச்சின் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின், நடத்தை ஆராய்ச்சிப் பிரிவால் நடத்தப்பட்ட, பொதுக்கருத்துக் கணிப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி, 895 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பங்கேற்ற 54 சதவீதமானோர், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் விருப்பத்தில் உள்ளனர்.
38 சதவீதமானோர், இதைப் போட்டுக் கொள்வதா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர் என்றும் 8 சதவீதமானோர், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரியவந்துள்ளது.
பாலின அடிப்படையில் 34 சதவீதமான ஆண்களும், 43 சதவீதமான பெண்களும், தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பான குழப்பத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர்.
55வீதமான சிங்களவர்களும், 59 வீத முஸ்லிம்களும், 56 வீத பறங்கியர்களும், 68 சதவீத மற்றைய இனத்தைச் சேர்ந்தவர்களும், தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் விருப்பம் கொண்டுள்ளனர்.
எனினும், 50 சதவீதமான்ன தமிழர்களே இதில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.