கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்திய நிறுவனத்தின் பங்கேற்பு, சிறிலங்காவின் கடல்சார் எதிர்காலத்துக்கு அவசியமானது என்று அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களுடன் மெய்நிகர் முறையில் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவின் துறைமுக வசதிகள் அல்லது சரக்குப் பரிமாற்றத்தினால், நன்மையமையும் முக்கியமான நாடாக இந்தியா இருக்கிறது என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க தூதுவர்,
“உள்நாட்டு செயல்முறைகளின் மூலம் விரிவான நல்லிணக்க மூலோபாயம் ஒன்று செயற்படுத்தப்படும் என்று சிறிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறியிருந்தார்.
அந்த வாக்குறுதியின் முன்னேற்றத்தை காண விரும்புகிறோம்.
ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு அர்த்தமுள்ள திட்டத்தை கொண்டு வருமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு நாடு என்ற வகையில் சிறிலங்கா தனது சொந்த மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை உணர்த்துவதற்கே நாம் உதவ முன்வந்துள்ளோம்.
அந்த வகையில், அமெரிக்கா தொடர்ந்தும் அதே பாதையில் செயற்படும்.” என்றும் அமெரிக்க தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.