பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்கக் கோரி எதன் அடிப்படையில் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று புரியவில்லை என்றும், இதுகுறித்து நீதிமன்றம் விளக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை குறித்தும், அதைப்போன்று இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சரவை எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் கடந்த 21ம் திகதி உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆளுநர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் தரப்பில் நாளை உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.