இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான தனது உறுதியான உறுதிப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வழங்கியுள்ளது.
மேலும் பிராந்தியத்தில் அமைதியை முன்னேற்றுவதற்காக இஸ்ரேலுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் (Anthony Blingen) கூறினார்.
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் காபி அஷ்கெனாசியுடனான (Gabi Ashkenazi) தொலைபேசி வாயிலான கலந்துரையாடலின்போது பிளிங்கன் (Blingen), “ஆபிரகாம் உடன்படிக்கைகள்” மூலம் அண்மையில் அடைந்த முன்னேற்றத்தைப் பாராட்டினார்.
மேலும் அந்த முன்னேற்றத்தை மேலும் கட்டியெழுப்புவதில் அமெரிக்க ஆர்வத்தை உறுதிபடுத்தியதாக வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா இஸ்ரேலுடன் சவால்களில் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்றும் இதன்போது உறுதி வழங்கப்பட்டுள்ளது.
ஆபிரகாம் உடன்படிக்கைகள் எனப்படுவது இஸ்ரேலுக்கும் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை இயல்பாக்குவதற்கான அமெரிக்க தரகு ஒப்பந்தமாகும்.