பலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கிச் சூட்டில், பலஸ்தீன இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் இஸ்ரேலிய இராணுவ வீராங்கனை ஒருவரை, 17 வயதுடைய குறித்த இளைஞன் கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி செய்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் இஸ்ரேலிய படைகளுக்கு எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இதுபோன்ற தனித்தனியான தாக்குதல் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.