கவர்ணர் ஜெனரல் அலுவலக அறிக்கையில் ஊழியர்கள் பொது அவமானத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேர நேர்காணல்களின் போது பெறப்பட்ட தகவல்களின் படி அவர்கள் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளனர்.
43இற்கும் அதிகமானவர்கள் இவ்வாறான நேர்காணல்களை வழங்கியதோடு உளரீதியான பாதிப்புடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேநேரம், வெறுப்பு பேச்சு மற்றும் இனரீதியான பாகுபாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
பெரும்பாலான ஊழியர்கள் ‘விஷம்’ நிறைந்த பணிச்சூழலில் இருப்பதை உணர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்களே கவணர் ஜெனரால இருந்த ஜுலி பயட் (Julie Payette) பதவி விலகக் காரணமாகியது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.