அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் நிறைவேறுவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடம் மீதான வன்முறையை தூண்டிவிட்டதாக, ட்ரம்ப் மீது, பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, செனட் சபையில், வரும் பெப்ரவரி,8ஆம் திகதி கண்டனம் தீர்மானம் மீது விவாதம் நடக்க உள்ளது.
செனட் சபையில், இரு கட்சிகளுக்கும், தலா, 50 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த தீர்மானத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்பதால், குடியரசு கட்சியின், 17 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்க வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலையில், அதற்கு சாத்தியமில்லை என்பதால், ட்ரம்ப் மீதான கண்டனத் தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.