டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் இருந்து விலகுவதாக இரண்டு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில், இரண்டு மாதங்களாக போராடி வரும் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் நேற்று டில்லியில் உழவு இயந்திர பேரணியை நடத்தின.
இதன்போது, வன்முறைகள் ஏற்பட்டதில், விவசாயி ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். 300க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாக இரண்டு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
விவசாயிகளின் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.





