ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன், ஐ.எஸ் பயங்ங்கரவாத அமைப்புக்கு நேரடித் தொடர்பு இருக்கும் என்று தான் நம்பவில்லை என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசெகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தெகிவளை ட்ரொப்பிக்கல் இன் விடுதியில் நடந்த குண்டுவெடிப்பு தவிர , ஏனைய குண்டுவெடிப்புகள் தொடர்பாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தியிருந்த்து.
இந்த விசாரணைகளில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதல்களின் பின்னணியில் இருப்பது குறித்த எந்த நம்பகமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
இதில் பல கேள்விகள் உள்ளன. தீவிரவாத அமைப்பு ஒன்றின் தலைவர் உலகில் எங்குமே தற்கொலைக்குண்டுத் தாக்தல்களை நடத்தியதில்லை.
பொதுவாக தலைவர்கள், தமக்கு கீழ் உள்ளவர்களைக் கொண்டு தான் இவ்வாறான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
சஹ்ரான் காசிம் தான், தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பின் தலைவர் என்பதை, குற்றப் புலனாய்வுப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.
எனவே, இதற்குப் பின்னால் இன்னொரு மறை கரம் இருந்திருக்க வேண்டும்.
வேறொருவரால் அல்லது வேறொரு தரப்பினால் சஹ்ரான் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்பதே தனது கருத்து என்றும் ஷானி சாட்சியமளித்துள்ளார்.