சமூக ஊடகங்களுக்கு மேலதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலான புதிய ஒழுங்கு விதிகளை அமுலாக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முகநூல் நிறுவனம் கனடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் விடயப்பரப்புக்கள் உள்ளிட்டவற்றையும் வகைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, முகநூல் மற்றும், வட்ஸ் அப், கீச்சகம் உள்ளிட்டவை தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதற்கான வரைவுகளை தயாரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் ஏற்படும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இது இருக்கும் என்றும் சமூதாய விழுமியங்களையும் மேம்படுத்த முடியும் என்றும் முகநூல் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.