கொங்கோ ஜனநாயக குடியரசின் பிரதமர் சில்வெஸ்டர் இலுங்கா இலுகம்பாவை (Sylvestre Ilunga Ilukamba) பதவிநீக்கம் செய்யும் பிரேரணைக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
நாட்டின் ஜனாதிபதி ஜோசப் கபிலா (Joseph Kabila) , பிரதமர், மற்றும் அமைச்சர்களின் செயல்திறன் மோசமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையிலேயே, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது பிரதமர் சில்வெஸ்டர் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை.
எனினும், அவர் பதவி விலகுவதற்கு 24 மணிநேர காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கொங்கோவின் 60 ஆண்டுகால வரலாற்றில் கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதலாவது அரசாங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.