ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான டொமினிக் ஜீவா காலமானார்.
வயது மூப்பினால் அவர் தனது 94 வது வயதில் நேற்று மாலை மரணமானார் என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் பிறந்த டொமினிக் ஜீவா, ஐந்தாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திக் கொண்ட போதும், எழுத்தாற்றலினால், ஈழத்தின் முன்னணி இலக்கியகர்த்தாக்களில் ஒருவராக மாறினார்.
இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்த டொமினிக் ஜீவா, மல்லிகை என்ற மாத சஞ்சிகையை ஆரம்பித்து, 48 ஆண்டுகளாக வெளியிட்டு வந்தார்.
சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டல விருதை முதன் முதலாகப் பெற்ற டொமினிக் ஜீவா, அடுத்தடுத்து இரு தடவைகள் அந்த விருதினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.