கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஊடக அமைப்புக்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.
உழைக்கும் ஊடக தொழிற்சங்க சம்மேளனம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.