இத்தாலியில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக, இந்திய மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள இந்திய துாதரகத்தில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் குடியரசு தினத்திற்கு முந்தைய இரவில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதுடன், சுவர்களில் ஆங்காங்கே, ‘காலிஸ்தான் வாழ்க’ என, எழுதப்பட்டது.
இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்த வன்முறை குறித்து, மத்திய அரசு, இத்தாலி அரசுக்கு தன் கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்து உள்ளது.
இந்திய தூதரகத்தையும், தூதரக அதிகாரிகள், ஊழியர்களை பாதுகாக்கும் பொறுப்பு, இத்தாலி அரசுக்கு உள்ளதை சுட்டி காட்டியுள்ள, மத்திய அரசு, வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வலியுறுத்தியுள்ளது.