கொரோனா தொற்றுநோய்க் காலத்தில் போது சில தம்பதிகள் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியாக வரம்பிற்குள் தள்ளப்பட்ட நிலையில், விவாகரத்து செய்யும் நிலைமைகள் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது விவாகரத்து பெறுவதற்கான ஆலோசனைகள் அதிகரித்துள்ளன. எனினும் விவாகரத்தாகும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தம்பதியினர் குடும்பநல வழக்குகளை தாக்கல்செய்தல் மற்றும் முரண்பாடுகளை களைதல் போன்ற விடயங்களில் நீண்டக ஆராய்வுகளை செய்துவரும் நிலைமையே அதிகமாக உள்ளதாகவும் அப்புள்ளி விபரங்களில் கூறப்பட்டள்ளது.
மேலும், முடக்கல் நிலைமைகள், மற்றும் தனிமைப்படுத்தல் நிலைமைகளின் போது பல குடும்பங்களினுள் விவாகரத்துக்கான தூண்டல்கள் ஏற்படுவதாகவும் இது எதிர்காலத்தில் விவாகரத்தான குடும்பங்களின் எணண்ணிக்கை அதிகரிக்கச் செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் அபாயமுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் எச்சரிக்கப்படுகின்றது.