ஒன்ராரியோவில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2ஆயிரத்து 93 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு 56 மரணங்களும் சம்பவித்துள்ளன.
அதேபோன்று கியூபெக்கிலும் ஆயிரத்து 365 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதோடு 39 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை நாடாளவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 876பேர் பாதிக்கப்பட்டதோடு 131பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால், ஏழு இலட்சத்து 66ஆயிரத்து 103பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 19ஆயிரத்து 664பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 57ஆயிரத்து 020பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 848பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




