இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதிப்படுத்தும் என்ற முழு நம்பிக்கை உள்ளதாக, இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு (benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து இந்தியப் பிரதமர் மோடியுடன் இஸ்ரேலிய பிரதமர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதன்போதே, இந்த சம்பவம் குறித்து இந்திய அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவார்கள் என்றும், இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்பதிலும் முழு நம்பிக்கை உள்ளதாக பெஞ்ஜமின் நேதன்யாகு கூறியுள்ளார்.
அதேவேளை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகரைத் தொடர்பு கொண்டு குண்டு வெடிப்பு சம்பவம், தொடர்பாகவும், விசாரணைகள் குறித்தும் விபரித்துக் கூறியுள்ளார் என்றும், தெரிவிக்கப்படுகிறது.