சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 305ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ள நிலைமையை நேற்றும் இன்றும் பதிவாகியுள்ள உயிரிழப்புக்களின் எண்ணிக்கை காட்டுகின்றது.
இதன்படி, நேற்று ஏழு பேரின் உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையயில் இன்று எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, இன்று மட்டும் 859 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரையான கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்து 445ஆகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், இன்று வரையில் கொரோனா தொற்றிலிருந்து 55 ஆயிரத்து 398பேர் குணமநை்துள்ள நிலையில் இன்னும் ஆறாயிரத்து 742 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.