பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத குழுத் தலைவர் மங்கள் பாக், கிளேமோர் (claymore) குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இயங்கும், லஷ்கர் இ இஸ்லாம் ( lashkar-e-islam) என்ற பயங்கரவாத குழுவின், தலைவரே, அச்சின் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, வீதியோரத்தில் பொருத்தப்பட்டிருந்த கிளேமோர் குண்டு மூலம், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பயங்கரவாத குழுவின் தலைவர் மங்கள் பாக் மற்றும், அவரது மெய்க்காவலர்கள் இருவரும் கொல்லப்பட்டதாக, மாகாண ஆளுநர் தனது கீச்சகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
மங்கள் பாக்கின் தலைக்கு, அமெரிக்க அரசாங்கம், 30 இலட்சம் டொலர் பரிசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.