ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துடன், சிறிலங்கா அரசாங்கம் இறுதி நிமிட பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட், வெளியிட்டுள்ள மோசமான அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இந்த விடயம் தொடர்பாக “ ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பணியகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம், அவர் எழுப்பியுள்ள விவகாரங்களில் ஒருவித உடன்பாட்டை எட்ட முயற்சிக்கிறோம்.” என்றும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.





