பிரான்ஸிலுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனமான சனோபி (Sanofi) நிறுவனம் பெரும் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்புமருந்தை தயாரிப்பதற்கு முன்வந்துள்ளது.
தனது போட்டியாளர்களான பைஸர், பயோஅன்ட்டெக் நிறுவனங்கள் தயாரித்த பைஸர் பயோ/அன்ட்டெக் (Pfizer/BioNTech) கொரோனா தடுப்புமருந்தின் 125 மில்லியன் மருந்தளவுகளை தயாரிப்பதற்கு சனோபி (Sanofi) நிறுவனம் முன்வந்துள்ளது.
ஐரோப்பாவில் பெருமளவிலான கொவிட்19 மருந்து தட்டுப்பாடு உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.