கிளிநொச்சி- உருத்திரபுரம், உருத்திரபுரீஸ்வரர் ஆலயப் பகுதியில், தொல்லியல் அடையாளம் இருப்பதாக கூறி பௌத்த பிக்குவும், சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரும், பார்வையிட்டுச் சென்றுள்ளதால் அங்குள்ள மக்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி – உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகவும், அங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தொல்லியல் திணைக்களத்தினர் அண்மையில் கூறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று நண்பகல் பௌத்த பிக்கு ஒருவர் அங்கு சென்றிருந்தார் என்றும், அதையடுத்து, அப்பகுதிக்கு சிறிலங்கா காவல்துறையினரும், இராணுவத்தினர் தனித்தனியாகச் சென்று பார்வையிட்டதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தினால் அப் பகுதி மக்கள் மத்தியில் தொடர்ந்து பரபரப்பான நிலை காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன