நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 879 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதேவேளை, நாடாளவிய ரீதியில் கொரோனா தடுப்பு செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதலாம் நாளான நேற்று 2 ஆயிரத்து 280 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று 32 ஆயிரத்து 539 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விஷேச வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.