கொலம்பியாவில் நீண்டகாலம் இடம்பெற்ற ஆயுத மோதல்களின் போது, போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று, பார்க் (Farc) போராளிக் குழுவின் 8 தளபதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு கொலம்பிய அரசாங்கத்துக்கும், பார்க் (Farc) எனப்படும், கொலம்பிய புரட்சிகர ஆயுதக் குழுவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்பாட்டுக்குப் பின்னர், போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இந்த சிறப்பு நீதிமன்றத்தில் முதல் முறையாக பார்க் அமைப்பின் 8 தளபதிகளுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்களை கடத்திச் சென்றனர், சித்திரவதை செய்தனர், சிலரை படுகொலை செய்தனர் என்று இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது,
கொலம்பியாவில் 50 ஆண்டுகளாக நீடித்த ஆயுத மோதல்களில் சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.