மத்திய சீன நகரமான வுஹானில் கொரோனா தோற்றம் குறித்து ஆராயும், உலக சுகாதார அமைப்பு தலைமையிலான வல்லுநர்கள் குழு இன்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்குச் சென்றிருந்த நிபுணர் குழுவினர், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கடந்த வியாழக்கிழமை முடித்த நிலையில், தற்போது வுஹானில் உள்ள ஆய்வகங்கள், சந்தைகள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
எனினும், ஆய்வு நடவடிக்கைகள் குறித்த இடங்கள் சரியாக அறிவிக்கப்படவில்லை என்றபோதும், முதற்கட்டமாக ஹுவானன் சந்தை மற்றும் வுஹான் ஆய்வகம் ஆகியவற்றைப் பார்வையிட குழு திட்டமிட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.