டில்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்றுமாலை நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக வெளிநாட்டவர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டில்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக, டில்லியில் வசிக்கும் ஈரானை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடந்து வருவதாகவும், வீசா முடிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பிற்கு அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய சதிச்செயலில் ஈடுபடுவதற்கு, சிறிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தி சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்தக் குண்டுவெடிப்பு இஸ்ரேலக்கு எதிரான ஒரு பயங்கரவாதச் செயல் என்று டில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.