ஒன்ராரியோவில் ஆயிரத்து 848பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பரிசோதனையின் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 43 இறப்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
அத்துடன் கியூபெக்கில் ஆயிரத்து 223பேருக்கு கொரோனா தொற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 31 இறப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
இதேவேளை, நாடாளவிய ரீதியில் 7இலட்சத்து 78ஆயிரத்து 972பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம் 20ஆயிரத்து 32பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமன்றி தற்போது 51ஆயிரத்து 796பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.