கனடிய வாழ் பிலிப்பைன்ஸ் சமூகத்தினர் தமது தாயக உறவுகளுக்கு ஒரு பில்லியன் டொலர்களை கடந்த வருடம் உதவித் தொகையாக அனுப்பி வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பிலிப்பைன்ஸ் வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதார மேம்பாடு உள்ளிட்டவற்றுக்காகவே இந்த நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக கனடிய வாழ் பிலிப்பைன்ஸ் சமூகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கனடிய வாழ் பிலிப்பைன்ஸ் சமூகத்தின் இந்த ஆண்டுக்கான நன்கொடை சேகரிப்புக்குரிய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.