கனடிய பாடசாலைகள் மீளத்திறப்பு தொடர்பாக மீள் பரிசீலனை செய்யுமாறு கனடிய பொதுசுகாதார துறையின் தலைமை வைத்தியர் தெரேசா டாம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் சமஷ்டி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் அடுத்து வரும் நாட்களில் பிரதமர் ரூடோ மாகாண அரசுகளுடன் திறந்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும், கொள்கை அளவில் மத்திய அரசாங்கம் இன்னமும் முடக்கல் நிலைமைகளை தளர்த்தவில்லை என்று சமஷ்டி அரசின் திட்டமிடல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.