ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னியை ( Alexei Navalny) விடுதலை செய்யக் கோரி, அரசின் தடைகளை மீறி ஆயிரக்கணக்கானவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடுமையான குளிருக்கு மத்தியில் மொஸ்கோவிலும், நாட்டின் பிற பகுதிகளிலும், ரஷ்ய அரசுக்கு எதிராக நவல்னியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கிரெம்ளின் மாளிகையை நோக்கியும், நவல்னி சிறை வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையை நோக்கியும் பேரணியாக சென்றவர்கள் கலகம் அடக்கும் காவல்துறையினரால் தடுக்கப்பட்டு , தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யா முழுவதிலும் இன்று 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்த வரும் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, அமைதியாக போராட்டம் நடத்துவோர் மீது ரஷ்யா வன்முறைகளைப் பயன்படுத்துவதற்கு பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.