கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் வூஹானில் உள்ள, கடல் உணவு சந்தையை உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு பார்வையிட்டுள்ளது.
கொரோனாவின் தோற்றம் குறித்து ஆராய சீனாவின் வூஹான் நகருக்கு சென்றுள்ள உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் குழு, 2 வார தனிமைப்படுத்தல் முடிந்த பின்னர், விசாரணையை தொடங்கியுள்ளது.
இவர்கள் வூகானில் உள்ள மிகப்பெரிய இறைச்சி சந்தையை பார்வையிட்டுள்ளதுடன், கடல் உணவு சந்தையிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
முன்னதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையையும் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் குழு பார்வையிட்டுள்ளது.