நீண்ட இழுபறிக்கு பிறகு பாலஸ்தீனத்துக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பாலஸ்தீனத்தில் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதற்கட்டமாக ஐயாயிரம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளது.
இஸ்ரேல் தனது அண்டை நாடான பாலஸ்தீனத்துக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க மறுத்து வருவதாக ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல், அமெரிக்காவின் ஃபைஸர் மற்றும் மொடர்னா நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.





