கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவினால், இந்திய – சிறிலங்கா உறவுகளில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவு குறித்து இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து கடுமையான ஏமாற்றம் வெளிப்படுத்தப்படும் என்று புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் கோட்டையாக மாறுவதை தடுப்பதற்காக, சிறிலங்கா மீதான தனது ஆர்வத்தை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும் என்றும், முக்கிய திட்டங்களுக்கு தொடர்ந்து நிதியளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டாலும், 2019 இல் கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டை மீறும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவு குறித்து, புதுடெல்லி வலுவான எதிர்வினையாற்றும் என்றும், அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.