சம்மர்ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து ஒரு சிறிய வெளிர் வண்ணம் இருண்ட நிற சாளரங்கள் கொண்ட நான்கு கதவுகள் கொண்ட செடான் அதிக வேகத்தில் அப்பகுதியை விட்டு வெளியேறியது என்று சாட்சிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், சந்தேக நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை நாடுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சம்மர்ஹில் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் மாதர்ஸ்பீல்ட் டிரைவில் (Mothersfield Drive) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.
இதன்போது ரொரண்டோவைச் சேர்ந்த 23 வயதான சிராக் டெஸ்ஃபே (Chirac Desfey) என்பவர் உயிழந்தார். மற்றொரு 27 வயதான பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.