ஜப்பானில் துணைக் கல்வி அமைச்சர் டெய்டோ டானோஸே (Deito Danose) மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவசரநிலை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த துணைக் கல்வி அமைச்சர் உள்ளிட்ட மூவர் அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சம்வத்தினை விசாரணைக்குட்படுத்திய பிரதமர் யோஷிஹிடே சுகா, (Yoshihide Suka) அமைச்சரவையிலிருந்து அமைச்சர் மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பதவியிலிருந்து நீக்கினார்.
ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியைச் (எல்டிபி) சேர்ந்த டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியிலிருந்து விலகியுள்ளனர்..