ஒட்டுக்குழுக்களின் தலைவர்களான கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோருடன் இந்தியா இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளது.
பிள்ளையான் மற்றும், கருணா ஆகியோருடன், இந்திய துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப் நேற்று தனித்தனியாக சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
இதன்போது, 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், தமிழ் மக்களின் அபிலாசைகள், அடைவதற்கான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற, இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, இந்திய துணை தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்புகளின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.