தமிழ்பேசும் மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் அராஜகச் செயல்களைக் கண்டித்தும், வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராகவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐ.நாவிடம் நீதி கோரியும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் பேரணி பல்வேறு தடைகளுக்கு மத்தியில் ஆரம்பமாகியது.

அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் ஆரம்பிக்கப்படும் இந்தப் பேரணி எதிர்வரும் 6ஆம் நாள் யாழ்ப்பாணம், வடமராட்சியில் உள்ள பொலிகண்டியில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக அமைப்புகள், பலசமய தலைவர்கள் மற்றும் அமைப்புகள், அரசியல்கட்சிகள், மாணவர் அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
இந்தப் பேரணிக்கு வடக்கிலும், கிழக்கிலும் உள்ள பொது அமைப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.