கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 150 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தொிவித்துள்ளார்.
சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 698 ஆக பதிவாகியுள்ளது.
அவர்களில் 59 ஆயிரத்து 43 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 6 ஆயிரத்து 325 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.