ஜம் இய்யதுல் உலமா சபையின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
உலமா சபையின் தலைவர் ரிஷ்வி முப்தியின் செயற்பாடுகள் நாட்டில் அடிப்படைவாதத்ததை தோற்றுவிப்பதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவரின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறப்பு விசேட குழுவை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்என்றும் அவர் கூறினார். பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டிருந்தார்