எத்தனை அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் திட்டமிட்படி பொலிகண்டிய நோக்கிய பேரணி முன்னெடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்கா அரசாங்கத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள், வடக்கு கிழக்கின் நில அபகரிப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அனைத்து விதமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கும் முகமாகவும் அகிம்சை முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் உள்ளது.
இதனால் இப்போராட்டத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடுமையாக முயற்சிக்கின்றது. அதற்கு இடமளிக்காது சிறுபான்மை சமூகங்கள் அணி திரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.