தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனுக்கும் அம்பாறையில் சிறிலங்கா இராணுவத்தினருக்குமிடையே இன்று பிற்பகல் தம்பிலுவில் சோதனைச்சாவடியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மக்களை சந்திக்க சென்ற போது, சோதனைச்சாவடியில் நின்ற சிறிலங்கா இராணுவத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசாவின் வாகனத்தை சூழ்ந்து அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதுடன் அவரை கீழே இறங்குமாறும் சத்தமிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து வாகனத்தையும் சோதனையிட்டுள்ளனர்.
அத்துடன் திருக்கோவில் பிரதேத்திற்கு செல்லமுடியாது என்றும், சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்துள்ளனர்.





