கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்காக கடந்த வாரம், சர்வதேச நாணய நிதியம் மியன்மார் அரசாங்கத்திற்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவிப் பொதியின் ஒரு பகுதியாக அனுப்பி வைத்துள்ளது.
மியான்மரின் அரச ஆலோசகர் ஆங் சான் சூகி மற்றும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் மற்ற மூத்த நபர்கள் தலைநகர் நெய்பிடாவில் கைது செய்யப்பட்டதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த பணம் அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் மீட்பு நடவடிக்கைளுக்காக மியான்மருக்கு இந்த பணம் உதவும் என்று சர்வதேச நாணய நிதியம் முன்னர் நம்பிக்கை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.